தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

0 3268

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல  கீழடுக்கு சுழற்சி காரணமாக, 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூன் 17ஆம் தேதி நீலகிரி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், ஜூன் 18ஆம் தேதி திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

லட்சத்தீவு, கர்நாடகா, கேரள கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments