மலைவாழ் கிராம மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல ரூ. 2.80 லட்சம் மதிப்பில் பேட்டரி வாகனம் அறிமுகம்.!
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை அருகே மலைவாழ் கிராம மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பேட்டரி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பழைய சர்க்கார்பதியில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ள நிலையில், உயர்கல்வி பயில மாணவர்கள் சுமார் 6 கி.மீ தூரம் வரை சென்று வருகின்றனர்.
40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்திய நிலையில், கல்வி தடைபடும் சூழல் உருவானது. இதை கருத்தில் கொண்டு தன்னார்வலர்கள் உதவியுடன் பழைய சர்க்கார்பதி கிராமத்துக்கு 14 பேர் வரை செல்லும் அளவிற்கு பேட்டரி வாகனம் வழங்கப்பட்டு உள்ளது
Comments