இந்தியா - ஆசியான் நாடுகள் டெல்லியில் பேச்சுவார்த்தை..!

0 3027

இந்தியா-ஆசியான் நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று தொடங்குகிறது. வர்த்தக உறவு, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு ஆகியவற்றை விரிவுபடுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மியான்மர், மலேசியா, லாவோஸ், இந்தோனேசியா, கம்போடியா, புருணே ஆகிய 10 நாடுகள் ஆசியான் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், இந்தியா-ஆசியான் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம், டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்துவது குறித்தும், உக்ரைன்-ரஷியா போருக்கு இடையே நாடுகளுக்கு இடையேயான உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

இயற்கை வளம் நிறைந்த தென்சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில் இதில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் வெளியுறவு அமைச்சர்கள் ஏற்கனவே டெல்லி வந்து சேர்ந்துவிட்டனர். நேற்று நடைபெற்ற இந்தியா-ஆசியான் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில், 2025ம் ஆண்டு வரையிலான செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments