நஷ்டம் காரணமாக ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்த கப்பல் உணவகம் அகற்றம்

0 6082
ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்த கப்பல் உணவகம் அகற்றம்

ஹாங்காங்கின் அடையாளமாக கருதப்பட்டு வந்த பிரமாண்ட அடுக்குமாடி உணவக கப்பல் கடும் நஷ்டம் காரணமாக துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

பார்ப்பதற்கு அரண்மனை போல் காட்சித்தரும் இந்த கப்பல் 1976 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த சொகுசு கப்பல் உணவகத்திற்கு பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத், பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் போன்றோரும் வந்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றினால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த மிதக்கும் உணவகம் மூடப்பட்டது. பராமரிப்பு செலவினால் கூடுதல் சுமை ஏற்பட்டதால் அதன் உரிமையாளர்கள் இதனை கைவிட முடிவு செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments