மொசாம்பிக்கின் மலைப்பகுதியில் காபி பயிரிடுவதால் செழித்து வளரும் காடுகள்
மொசாம்பிக்கின் கொரோங்கோசா தேசியப் பூங்கா அமைந்துள்ள மலைச் சரிவுகளில் காபி பயிரிட்டுள்ளதால் அது பசுமையுடன் அடர்ந்த காட்டுப் பகுதியாக உருவாகியுள்ளது.
ஒருகாலத்தில் பசுமைமாறாக் காடுகள் இருந்த மலைச்சரிவுகளில் மண்ணரிப்புக் காரணமாகப் புதர்களும் புல்வெளிகளும் மட்டுமே எஞ்சி இருந்தன. அண்மைக்காலமாக ஆயிரம் மீட்டர் உயரமுள்ள மலைச்சரிவுகளில் காபி பயிரிடுவதால் காடுகளின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மலையின் ஒருபுறத்தில் வறண்ட பாலைவனமும் மறுபுறத்தில் காபி பயிர்களுடன் அடர்ந்த காடுகளும் உள்ளன. காபிச் செடிகள் வளர நிழல் தேவை என்பதால் ஒவ்வொரு காபிச்செடிக்கும் ஒரு மரத்தை நட்டுவளர்த்ததாக அங்குத் தோட்டம் வைத்துள்ள ஜூலியஸ் சாமுவேல் தெரிவிக்கிறார்.
கொரோங்கோசா தேசியப் பூங்காவில் பணியாற்றிய இவர் உள்நாட்டுப் போரின்போது ஜிம்பாப்வேக்குத் தப்பிச் சென்றபோது அங்கிருந்து காபிச் செடிகள் வளர்ப்பைப் பற்றி அறிந்து கொண்டுவந்ததாகத் தெரிவித்துள்ளார்.
Comments