ஜூலையில் விண்ணில் பாய்கிறது ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கிய ஸ்டார்ஷிப் மாதிரி ராக்கெட்.!
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மாதிரி ராக்கெட் ஜூலை மாதத்தில் பறக்க தயாராக இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மனிதர்களையும், சரக்குப் பொருட்களையும் விண்ணிற்கு கொண்டு செல்லக்கூடிய சுமார் 400 அடி உயரமுள்ள மீண்டும் பயன்படுத்தும் வகையில் ஸ்டார்ஷிப் மாதிரி ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸின் சூப்பர் ஹெவி பூஸ்டர் மற்றும் ரேப்டார் சீரிஸ் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ராக்கெட்டை, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு விண்ணில் செலுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ஷிப் மாதிரியின் இரண்டாவது ராக்கெட் ஆகஸ்ட் மாதத்தில் விண்ணில் செலுத்தப்படும் என்றும் ஸ்பேஸ் நிறுவனம் கூறியுள்ளது.
Comments