ராயல் கரீபியன் சொகுசு கப்பல்களுக்கு இணைய சேவை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனர் எலான் மஸ்கிடம் கோரிக்கை!
ராயல் கரீபியன் சொகுசு கப்பல்களுக்கு இணைய சேவை வழங்குமாறு ஸ்டார்லிங்க் நிறுவனர் எலான் மஸ்கிடம் அந்நிறுவனம் கோரியுள்ளது.
தங்கள் நிறுவன கப்பல்களுக்கு இணையதள சேவை வழங்குவது குறித்து அமெரிக்கத் தொலைத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தும் பெடரல் கம்யூனிகேஷன் கமிஷன் நிறுவனத்திடம் ராயல் கரீபியன் நிறுவனம் முறையிட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் இணைய சேவை பெற விண்ணப்பிக்கும் முதல் நிறுவனம் ராயல் கரிபீயன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கப்பல்களில் பயணிக்கும்போதே இணையசேவையைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments