அவ்வளவு பயமிருக்கில்ல.. அப்புறம் ஏன் காப்பாத்தனும்..? அப்படியே தூக்கி போட்ட குரூப்..! விபரீத விலங்கு நேசர்கள்..!
தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் தகர டின்னுக்குள் தலைசிக்கிக் கொண்டதால் அவதிப்பட்ட கரடியை, போராடி மீட்ட வாகன ஓட்டிகள், சீறிய கரடியிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள அலறியடித்துக் கொண்டு ஓடிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.
உதவி செய்வதே சில சமயங்களில் உபத்திரம் ஆகிவிடும் என்பார்கள் அது போன்ற தொரு சம்பவம் சைபீரியாவில் அரங்கேறி இருக்கிறது. அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையோரம் பெட்ரோல் டின்னுக்குள் தலை சிக்கிய நிலையில் கரடி ஒன்றை கண்ட விலங்கு நேசர்கள் சிலர் அதன் மீது இரக்கப்பட்டு தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் தலையில் சிக்கி இருந்த டின்னை எடுக்க போராடினர்
தனக்கு உதவி செய்கிறார்கள் என்பதை உணராத கரடியாரோ ஆக்ரோஷமாக உருண்டு புரண்டு சிலரது கைகளை பிரண்டி வைத்தார். இருந்தாலும் கரடியின் கழுத்தில் நீண்ட கயிற்றை போட்டு இருவர் பிடித்துக் கொள்ள 4 பேர் அந்த தகர டின்னை சுற்றி லாவகமாக இழுத்து கரடியின் தலையில் இருந்து எடுத்தனர்.
மீடகப்பட்ட அடுத்த நொடியே கரடியார் சீற்றத்துடன் காணப்பட்டதால் அதனை மீட்டவர்களும், வீடியோ எடுத்தவரும் கரடியிடம் இருந்து தப்பித்து அலறியறித்துக் கொண்டு ஓடத்தொடங்கினர்.
அதன் கழுத்தில் கயிற்றை போட்டு பிடித்துக் கொண்டிருந்தவர்களின் நிலை என்னவானது? என்பது தான் தெரியவில்லை. கரடிக்கு உதவ போய் கச்சிதமாக சிக்கிய அவர்களின் நிலை என்ன ? என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு இதேபோல டின்னுக்குள் தலை சிக்கிய கரடிகுட்டியை மீட்ட சில விலங்கு நேசர்கள் , கரடி குட்டி தங்களை தாக்கிவிடக்கூடாது என்ற அச்சத்தில் அதனை மலையில் இருந்து அப்படியே தூக்கிக் கீழே போட்ட காட்சியை பகிர்ந்து வருகின்றனர்.
Comments