திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலை வைப்பதற்கான தடை நீங்கியது..
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிட்ட நிலத்துக்கான பட்டா சட்டவிரோதமாக பெறப்பட்டுள்ளதால் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்படவில்லை என்றும் பட்டா நிலத்தில் சிலை அமைப்பதை ஆக்கிரமிப்பு என கூற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, பட்டாவை எதிர்த்து வழக்கு தொடரும் வகையில் இந்த வழக்கை வாபஸ் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
Comments