சிவிரோடொனெட்ஸ்க் நகருக்கு செல்லக் கூடிய அனைத்து பாலங்களையும் தகர்த்த ரஷ்ய ராணுவம்
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ள சிவிரோடொனெட்ஸ்க் நகருக்கு செல்லக் கூடிய அனைத்து பாலங்களையும் ரஷ்ய ராணுவம் தகர்த்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய லுஹான்ஸ்க் ஆளுநர் செர்ஹி ஹைடாய், பாலங்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டதால் சிவிரோடொனெட்ஸ்க்கில் வசிக்கும் மக்களுக்கு பொருட்களை வழங்குவதும் அங்கிருந்து மக்களை வெளியேற்றுவதும் சாத்தியமற்றது என்று தெரிவித்தார்.
மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார். ரஷ்ய எல்லையை ஒட்டியிருக்கும் டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர Severodonetsk மற்றும் Lysychansk பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
Comments