"கணவரை கொலை செய்வது எப்படி ?" சம்பவம் செய்துவிட்டு கட்டுரை எழுதிய பெண் எழுத்தாளர்.. 2 ஆண்டுகளுக்குப் பின் போலீசில் சிக்கிய ஸ்டோரி..!

0 3214

"கணவரை கொலை செய்வது எப்படி ?" என்ற கட்டுரையின் மூலம் பிரபலமான அமெரிக்க பெண் எழுத்தாளருக்கு, தனது கணவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல குறு நாவல்களை எழுதியுள்ள நான்சி கிராம்ப்டனின் கணவரும், சமையல் கலை நிபுனருமான டானியல் கிரெய்க், கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் சமையல் வகுப்புகள் நடத்தி வந்த நிறுவனத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

அவரது பெயரில் இருந்த 9 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணமும், இரண்டேகால் கோடி ரூபாய் வீடும் நான்சி வசம் சென்றது. கொலை நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது நான்சி அங்கு இருந்துள்ளது தெரியவந்தது.

இன்சூரன்ஸ் பணத்திற்காக அவர் கணவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments