ஈராக்கில் தொடர்ந்து வீசி வரும் புழுதிப் புயல்.. செந்நிற போர்வையால் போர்த்தியது போல் காட்சி..!
ஈராக்கை செந்நிற போர்வையால் போர்த்தியது போல் வீசிய புழுதிப் புயலால் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்கு மக்கள் ஆளாகினர்.
பாக்தாத் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து வீசி வரும் புழுதிப் புயலால் சுவாசக் கோளாறு, சறுமப் பிரச்சினைகளுக்கு ஆளாகி நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக பாக்தாத் சர்வதேச விமான நிலையம் வழக்கம் மான பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. கொளுத்தும் வெயிலுடன், புழுதிப் புயலும் சேர்ந்து வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
Comments