உயர்தொழில் நுட்பத்துறையில் அமெரிக்கா - சீனா இடையே போட்டா போட்டி
உயர் தொழில் நுட்ப சாதனங்கள் உற்பத்தி சந்தையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.
உயர் தொழில் நுட்பத்துறையில் அதிக அளவு முதலீடுகள் செய்த சீனா தற்போது உலகளாவிய சந்தையில் அதிவேக வளர்ச்சியை கண்டுள்ளது.
1995 ல் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்த சீனாவின் பங்கு 2018 ல் 21.5 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. மாறாக 1995 ல் 24 சதவீதமாக இருந்த அமெரிக்காவின் பங்கு 2018 ல் 22.5 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம், கணிப்பொறி உள்ளிட்ட 7 முக்கிய துறைகளில் சீனா இதனை சாதித்துள்ளது.
Comments