மே மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு
மே மாதத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒரு நாளைக்கு 49 இலட்சத்து 80 ஆயிரம் பீப்பாய் என்கிற அளவுக்கு அதிகரித்துள்ளது.
இது 2020 டிசம்பருக்குப் பின் உள்ளதிலேயே மிக அதிகமாகும். முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்ததை விட 19 விழுக்காடு அதிகமாகும்.
மே மாதத்தில் ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிக அளவு எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளில் சவூதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்யா இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.
Comments