கவுஹாத்தியில் மலிவு விலை செயற்கை கால்கள் உருவாக்கிய ஐ.ஐ.டி. ஆராய்ச்சிக்குழு
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேம்பட்ட வசதிகளுடன் மலிவு விலை செயற்கை கால்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இயந்திரவியல் துறை பேராசிரியர் கனகராஜ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் இதனை உருவாக்கியுள்ளனர்.
ஸ்பிரிங் அசிஸ்டட் டீப் ஸ்க்வாட் தொழில்முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கால்கள் முழங்கால் சுழலும் வசதி, இந்திய கழிப்பறையை பயன்படுத்தும் வசதி, குறுக்கு கால் போட்டு உட்காருவது என இந்தியர்களின் வாழ்க்கை முறையை பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments