ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது - மத்திய அரசு
ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என அச்சு, காட்சி மற்றும் இணைய ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சூதாட்டம் மற்றும் பந்தயம் ஆகியவை நாட்டின் பல்வேறு பகுதியில் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவை இளைஞர்கள், சிறார்களுக்கு சமூக பாதிப்பு மற்றும் நிதி சிக்கலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்கள் தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
Comments