ரூ.1.5 லட்சம் கோடியில் 114 விமானங்கள்.. வலிமையை அதிகரிக்கும் விமானப்படை...

0 2696
இந்திய விமானப்படையின் வலிமையை மேலும் அதிகரிக்க 114 போர் விமானங்களை படையில் இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் 96 விமானங்களை உள்நாட்டில் தயாரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய விமானப்படையின் வலிமையை மேலும் அதிகரிக்க 114 போர் விமானங்களை படையில் இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் 96 விமானங்களை உள்நாட்டில் தயாரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சீனா, பாகிஸ்தான் விமானப்படைகளை மிஞ்சும் வித த்தில் இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக 83 இலகு ரக விமானங்களை வாங்க இந்திய விமானப்படை ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில் பணியில் உள்ள மிக் ரக விமானங்களின் பயன்பாட்டுக்காலம் முடிவுக்கு வர உள்ளதால் புதிய விமானங்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடியின் தன்னிறைவு பெற்ற பாரதம் திட்டத்தின் கீழ் போர் விமானங்களை உள்நாட்டில் தயாரித்து படையில் இணைத்துக் கொள்ள விமானப்படை திட்டமிட்டுள்ளது.

இதற்காக பல்திறன் போர் விமானங்களை இணைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக சமீபத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனங்களுடன் இந்திய விமானப்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

114 விமானங்களை வாங்க உள்ளதாகவும், இதில் 18 விமானங்களை வெளிநாட்டில் தயாரித்து இறக்குமதி செய்யவும், அடுத்த 36 விமானங்களை உள்நாட்டில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 36 விமானங்களுக்கான விலையில் ஒரு பகுதி மட்டுமே வெளிநாட்டு பணமாக கொடுக்கவும், மீத தொகையை இந்திய ரூபாயில் வழங்கவும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீதமுள்ள 60 விமானங்களை தயாரிக்கும் பொறுப்பை இந்திய நிறுவனங்கள் அளிக்கவும், அந்த தொகையை முழுமையாக இந்திய ரூபாயில் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அன்னிய செலாவணி மிச்சமாவதுடன், உள்நாட்டு தயாரிப்பை வலுப்படுத்த முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விமான தயாரிப்பிற்கான 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை பெற போயிங், லாக்ஹீக் மார்டின், சாப், மிக், டசால்ட் ஏவியேசன் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments