எரிவாயு வாகனங்களின் விற்பனை புதிய உச்சம் தொடும் - தயாரிப்பு நிறுவனங்கள்
எரிவாயு வாகனங்களின் விற்பனை புதிய உச்சத்தை எட்டக் கூடும் என வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ஐந்தரை ரூபாய் வரை செலவாகும் அதே நேரத்தில் எரிவாயு வாகனங்களுக்கு இரண்டு ரூபாய் 20 காசுகளே செலவாகிறது.
கடந்த நிதியாண்டில் இந்தியாவில் 2 இலட்சத்து 61 ஆயிரம் எரிவாயு வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இந்த ஆண்டில் டீசல் வாகனங்களைவிட எரிவாயு வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பத்தாயிரம் இடங்களில் எரிவாயு நிரப்பும் நிலையங்கள் அமைக்கவும், அதன்மூலம் இரண்டு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
Comments