கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: முதல் ஒரு வாரம் புத்துணர்ச்சி பயிற்சி.. உளவியல் ரீதியான வகுப்புகள்.!

0 2319

கோடை விடுமுறை முடிவடைந்ததை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும், இன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகள் புதிய உற்சாகத்துடன் தங்கள் கல்வி கற்றலைத் தொடங்கியுள்ளனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை, நுழைவு வாயிலிலேயே ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும், பாடம் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு இன்று வழங்கப்படும்.

கொரோனாவுக்கு பிந்தைய முழு கல்வியாண்டு தொடங்குவதால், முதல் வாரம், அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments