காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம்.. 5 போலீசார் பணியிடை நீக்கம்.. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் .!

0 3785

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் அடைந்தது தொடர்பாக ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்ட 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி ராஜசேகர் நேற்று மாலை உயிரிழந்ததை அடுத்து காவல்துறை உயரதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் அன்பு, இந்த சம்பவம் தொடர்பாக நீதி துறை நடுவர் விசாரணை மேற்கொள்ள உள்ளார் என்றும் முறையாக என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ எடுப்போம் என்றும் கூறினார். விசாரணை கைதி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments