தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி திறப்பு.!
கோடை விடுமுறை முடிந்து இன்று தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
ஒன்று முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த மே 13 ஆம் தேதி கோடை விடுமுறை விடப்பட்டது. நேற்றுடன் கோடை விடுமுறை முடிந்தது. இன்று தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க ஆசிரியர்கள் தயாராக உள்ளனர்.
பள்ளி திறப்பை முன்னிட்டு வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டன. பள்ளி வளாகம், மற்றும் வாகனங்கள் பராமரிக்கப்பட்டன. பள்ளி திறப்பு குறித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும், பாடம் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல் வாரம், அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்தப்படவுள்ளன. அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து, வழக்கமான பாடங்கள் நடத்தப்படும் என்று, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments