சென்னையில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட விசாரணை கைதி மரணம்

0 3901

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ராஜசேகர் என்ற விசாரணை கைதி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

செங்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் மீது கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 23 வழக்குகள் உள்ள நிலையில், குற்ற வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கொடுங்கையூர் போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் புறக்காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின்போது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விசாரணைக்கு வரும்போதே அவர் உடல்நலக் குறைவோடு இருந்ததாகவும், தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே, ராஜசேகர் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments