ரஷ்யாவில், புதிய பெயரில் இயங்கத் தொடங்கிய "மெக் டொனால்ட்ஸ்" உணவகங்கள்
மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ரஷ்யாவை விட்டு வெளியேறிய நிலையில் அதன் உணவகங்கள், வுகூஸ்னோ ஐ டோச்கா என்ற பெயரில் இன்று முதல் இயங்கத் தொடங்கி உள்ளன.
உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டித்து ரஷ்யா-வை விட்டு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் வெளியேறியது. ரஷ்யாவில் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்ட அலெக்சாண்டர் கோவர் அங்குள்ள 850 மெக்டொனால்ட்ஸ் உணவகங்களை நடத்த காப்புரிமையை பெற்றார்.
தலைநகர் மாஸ்கோவில், முதல் உணவகத்தை திறந்து வைத்த கோவர், இதற்கு முன் பரிமாறப்பட்ட அதே உணவு வகைகள் இனி புதிய பெயர்களில் பரிமாறப்படும் என்றார்.
Comments