அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்வாரியம் கூடுதலாக 6220 மெ.வா. மின்னுற்பத்தி செய்யும் - அமைச்சர் செந்தில் பாலாஜி!
தமிழ்நாடு மின் வாரியம் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக ஆறாயிரத்து 220 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மீஞ்சூர் அருகே உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் புதிய மின்னுற்பத்தி அலகு அமைக்கும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் மின் தேவை 14 ஆயிரத்து 500 மெகாவாட்டிலிருந்து 16 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
Comments