இந்தியாவில் கொரோனா 4ஆம் அலை பரவத் தொடங்கி விட்டதா?

0 4311

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 30 சதவீதம்  அதிகரித்துள்ளது.

அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 30 சதவீதம் அதிகமாகும்.

புதிய பாதிப்புகளில் 75 சதவீதம் தலைநகர் கொல்கத்தாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகக்கவசம் அணியாமல் மக்கள் அலட்சியம் காட்டுவதே கொரோனா பரவல் திடீரென அதிகரிக்கக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments