அப்பாவி பொதுமக்கள் 17 பேரை சுட்டுக் கொன்ற வழக்கு.. குற்றப்பத்திரிகையில் 30 ராணுவ வீரர்களின் பெயர்கள்..!
நாகலாந்தில் அப்பாவி பொதுமக்கள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 30 ராணுவ வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்தாண்டு டிசம்பர் 4ஆம் தேதி மோன் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்துவிட்டு திரும்பிய தொழிலாளர்களை, தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் பாரா சிறப்பு படை வீரர்கள் 21 பேர் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதே வீரர்களின் நோக்கமாக இருந்தது என்றும் நாகலாந்து காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
Comments