பணமும் போச்சு.. மானமும் போச்சு... வீடியோ காலில் சிக்கிய வில்லங்க கல்லூரி சேர்மன்..! டிஸ்கவுண்ட் காதல் பரிதாபம்

0 5941

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் மாணவிகளுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி சண்டையில் , நிர்வாக தரப்புக்கு ஆதரவான மாணவியுடன், கல்லூரி சேர்மன் பேசிய வில்லங்க வீடியோ கால் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவியுடனான டிஸ்கவுண்ட் காதலால் கம்பி என்னும் கல்லூரி சேர்மன் குறித்து விவரிக்கின்றது இந்த் செய்தி தொகுப்பு..

அருப்புக்கோட்டை தெற்கு தெருவில், அரசு என்ற பெயரில் எலக்ட்ரோ ஹோமியோபதி மற்றும் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில் இந்த கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் ஒரு மாணவியிடம் வாட்ஸ் அப் சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார்.

இருவரும் காதல் மொழி பேசியதன் பயனாய் அந்த மாணவியை, லீடராக்கியதுடன் கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் வரை டிஸ்கவுண்ட் வழங்கி உள்ளார்.

அந்த மாணவியை லீடராக்கியதால் நிர்வாகத்திற்கு எதிராக செயல்பட்டு வந்த எதிர்கோஷ்டி ஆத்திரமடைந்தது.

கடந்த 6 மாதமாக லீடரான மாணவியை கண்காணித்து வந்துள்ளனர். கல்லூரி சேர்மன் தாஸ்வினுக்கு நெருக்கம் என்பதால் அந்த மாணவியும் வகுப்பில் எல்லைமீறியதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று லீடர் மாணவிக்கு தெரியாமல் அவரது ஸ்மார்ட் போனை தூக்கிய எதிர்கோஷ்டி மாணவிகள், அந்த செல்போனில் கல்லுரி சேர்மனும், லீடர் மாணவியும் வீடியோகாலில் ஆடையின்றி பேசிய வீடியோக்களை எடுத்து அதனை வாட்ஸப்பில் பரப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும், கல்லூரியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரிக்குச் செல்லாமல் கல்லூரி வாயிலில் நின்று மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். மாணவிகளை சமரசம் செய்ய வந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து லீடர் மாணவியிடம் புகார் பெற்று கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து கல்லூரியில் தங்கள் எதிர்காலம் குறித்தும், தங்களுடைய சான்றிதழ்கள் மற்றும் கட்டிய பணத்தை உடனடியாக திரும்பி தர வலியுறுத்தியும், கல்லூரி மாணவிகள் அவர்களது பெற்றோர் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் எனக்கூறி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதானத்தை ஏற்காமல் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தால் மதுரை விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கல்லூரிச் சேர்மன் கைதானதையும் தொடர் விசாரணையில் தீர்வுக்காணப்படும் என்று எடுத்துக் கூறி போராட்டத்தை கைவிடச் செய்தனர். 

படிக்க வந்த மாணவியை டிஸ்கவுண்ட் கொடுத்து மயக்கி, வீடியோ காலில் விபரீத காதல் வளர்த்த வில்லங்க கல்லூரி சேர்மன் தற்போது கம்பி எண்ணி வருகின்றார்...

கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேசை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments