நடப்பு நிதியாண்டில் மின்சார வாகனங்கள் விற்பனை மும்மடங்காக அதிகரிக்கும் - உற்பத்தியாளர் சங்கம்

0 2022
இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் மும்மடங்காக அதிகரிக்கும் என மின்வாகன உற்பத்தியாளர் சங்கம் கணித்துள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் மும்மடங்காக அதிகரிக்கும் என மின்வாகன உற்பத்தியாளர் சங்கம் கணித்துள்ளது.

மின்சார வாகனங்களில் ஒருசில தீவிபத்துக்கள் நேர்ந்தாலும் 2021 - 2022 நிதியாண்டில் மூன்று இலட்சத்து 40 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 42 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்ற நிலையில், தீவிபத்துக்களின் காரணமாக மே மாதத்தில் 20 விழுக்காடு சரிந்து 32 ஆயிரத்து 600 ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும் நடப்பு நிதியாண்டில் எட்டு இலட்சம் முதல் ஒன்பது இலட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகும் என மின்வாகன உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments