விழுப்புரம் நகராட்சி பள்ளி கழிப்பறையில் சிங்குகளை சுத்தம் செய்த மாவட்ட ஆட்சியர்
நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதையொட்டி விழுப்புரம் நகராட்சி பள்ளியில் உள்ள கழிப்பறையில் அசுத்தமாக இருந்த சிங்குகளை தனது கைகளால் ஸ்க்ரப்பர் வைத்து தேய்த்து கழுவி தூய்மைப்பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
தூய்மைப்பணிகள் சம்பிரதாயத்திற்காக மேலோட்டமான பணிகளாக இல்லாமல் இப்படித்தான் முறையாக இருக்க வேண்டும் என என அறிவுறுத்திய அவர், கரும்பலகையில் பெயிண்ட் அடித்தும் பணிகளை துரிதப்படுத்தினார்.
தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவிட்டதற்கிணங்க, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
Comments