"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று சற்று அதிகரிப்பு.. முதலமைச்சர் முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தமிழகத்தில் முக கவசம் அணிவதை உறுதி செய்யவும், கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
Comments