ஏடிஎம் எந்திரத்தில் இருந்து கரையான் அரித்த நிலையில் வந்த ரூ.500 நோட்டுகள்... அதிர்ச்சியடைந்த பெண்

0 3159

தென்காசி அருகே, இந்தியா ஒன்  ஏடிஎம் எந்திரத்தில் இருந்து அவசர தேவைக்காக பணம் எடுத்தபோது கிழிந்த 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் பணம் எடுக்க வந்த பெண் அவதியடைந்தார்.

மேலக்கடையநல்லூரில் உள்ள இந்தியா ஒன் ஏடிஎம் எந்திரத்தில், பெண் ஒருவர் 9 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார். அதில் சுமார் 15, ஐநூறு ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில் பேப்பர் வைத்து ஒட்டப்பட்டும், சில நோட்டுகள் கரையான் அரித்தாற் போன்றும் வந்துள்ளன.

இதுகுறித்து ஏடிஎம் ஊழியரிடம் புகார் தெரிவித்த போது, சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் திருநெல்வேலி மண்டல அலுவலகத்தில் புகார் அளிக்க கூறியதாக தெரிகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments