பிளாஸ்டிக்குகளை உணவாக உண்ணும் புழுக்களை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்..!
சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்குகளையே உணவாக உண்ணும் புழுக்களை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
மூன்று வகை புழுக்களிடம் மூன்று வார சோதனை மேற்கொண்டதில் சூப்பர் வார்ம் என்றழைக்கப்படும் புழுக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கடித்து தின்று ஜீரணிக்கும் அதிசயத்தை கண்டு பிடித்தனர்.
இந்த புழுக்களின் குடலில் உள்ள ஒருவிதமான நொதி பிளாஸ்டிக்கையே ஜீரணமாக்கி விடுகிறது. இந்த நொதியில் உள்ள பாக்டீரியாக்களை ஆய்வு செய்தால் பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புரட்சியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சுற்றுசூழலை பாதிக்காத பிளாஸ்டிக்கை கூட உருவாக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
Comments