மகாராஷ்டிராவில் கடும் தண்ணீர் பஞ்சம்.. கிணறுகள் வற்றிப்போய் விட்டதால் குடிநீருக்கு அல்லாடும் மக்கள்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் கிராமமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அங்கு பல மாவட்டங்களில் கோடை காலத்தால் கிணறுகள் வற்றி போய் விட்டன.
ஆழமான கிணறுகளின் அடியில் எஞ்சியுள்ள தண்ணீரை சேகரிக்க சுற்று சுவரே இல்லாத அந்த கிணறுகளின் விளிம்பில் நின்று பெண்கள் தண்ணீரை வாளிகளில் சேகரிக்கின்றனர்.
உயிரை பயணம் வைத்து சேகரிக்கப்படும் இந்த தண்ணீரும் சுத்தமாக இல்லை. சேறு கலந்த இந்த தண்ணீரை வடிக்கட்டி குடித்தாலும் உடல்நலக் கோளாறு ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
Comments