எரிப்பொருட்களின் விலையேற்றத்தை எதிர்த்து 1000க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் போராட்டம்..!
எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தென்கொரியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிப்பொருட்களின் விலையை குறைக்காத வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
லாரி ஓட்டுநர்களின் இந்த ஒட்டுமொத்த வேலைநிறுத்தத்தினால் அங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டு செமிகண்டக்டர்களின் கச்சா பொருட்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி பெருமளவுக்கு பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Comments