ஏழைகள் நலனுக்கான அரசு... பிரதமர் மோடி பெருமிதம்!

0 2315

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கடந்த எட்டு ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பதற்காகத் தமது அரசு செயலாற்றி வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் சிக்லி என்னுமிடத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது நாட்டுப் புறக் கலை நிகழ்ச்சிகளுடன் பிரதமருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

நவ்சாரி மாவட்டத்தில் 3050 கோடி ரூபாய் மதிப்பில் பணி நிறைவுற்ற திட்டங்களைத் தொடக்கி வைத்த பிரதமர் மோடி, புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

 

விழாவில் பேசிய பிரதமர் மோடி, கடந்த இருபதாண்டுகளாக விரைவான வளர்ச்சியடைந்து வருவது குஜராத்தின் பெருமை எனக் குறிப்பிட்டார். ஏழைகள், அடித்தட்டு மக்கள், தலித்கள், பழங்குடியினர், பெண்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்யத் தங்கள் வாழ்நாள் முழுமையும் உழைப்பதாகத் தெரிவித்தார்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்ட தமது அரசு கடந்த எட்டாண்டுகளாக ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுத்து வருவதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு ஏழைக்கும் தூய்மையான நீரைப் பெறும் உரிமையுள்ளதாகவும், அதை நனவாக்கும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். ஆட்சியில் இருப்பதை மக்களுக்குத் தொண்டாற்றக் கிடைத்த வாய்ப்பாகத் தான் கருதுவதாகக் குறிப்பிட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments