சீனாவின் ஹங்சோ நகரத்தில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து... 4 பேர் உயிரிழப்பு

0 2320

கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஹங்சோ நகரத்தில் வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

கட்டிடத்தின் 2-வது மாடியில் இயங்கி வந்த சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தில் முதலில் தீப்பிடிக்கத் தொடங்கி கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

நச்சு வாயுவை சுவாசித்த ஒருவர், தீக்காயங்கள் ஏற்பட்ட 5 பேர் என மொத்தம் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments