அண்ணா பல்கலைக்கழகத்தில் சீட்... முன்பணம் கேட்டு வரும் போலி இ-மெயில்கள்... எச்சரிக்கும் நிர்வாகம்

0 2354

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சீட் இருப்பதாகக் கூறி முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானது என அப்பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களை குறிவைத்து, முதல் செமஸ்டர் கட்டணத்துடன் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அனுப்புவது போல போலியாக இ-மெயில் அனுப்பப்படுவதாக புகார் எழுந்தது.

இது குறித்து விளக்கம் அளித்த அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டுமெனவும் போலி இ-மெயில்கள் பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments