பெருவில் சுரங்க தொழிலாளர்களிடையே மோதல் - 14 பேர் பலி
தென் அமெரிக்க நாடான பெருவில் தங்க சுரங்க தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
காரவெலியில் உள்ள சுரங்கத்தில் முறைசார தொழிலாளர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடின ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், காணாமல் போன 10 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக 31பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments