ஐரோப்பாவின் மிகப்பெரிய டைனோசர் எச்சம் கண்டெடுப்பு... 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என கணிப்பு
ஐரோப்பாவின், இறைச்சி உண்ணும் மிகப் பெரிய டைனோசரின் எச்சங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
"ஐல் ஆப் வைட்" தீவு கடற்கரையில் பாறைகளுக்கிடையே டைனோசரின் புதைப்படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டைனோசரின் பல்வேறு எலும்புகளை ஆய்வு செய்ததில் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த வகை டைனோசர் வாழ்ந்திருக்கலாம் என்றும், 33 அடி நீளம் இருந்திருக்கக் கூடும் எனவும் கருதுகின்றனர்.
கண்டுபிடிக்கப்பட்டவை Spinosaurs வகை டைனோசர்களாக கூட இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
Comments