44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த முடிவு
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்க விழாவை, வரும் ஜூலை 28ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், போட்டியில் பங்கேற்க உள்ள 187 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் தங்குவதற்கு ஏதுவாக தனியார் நட்சத்திர விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
மேலும், போட்டியின் துவக்க விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments