குடியரசுத் தலைவர் தேர்தல் எப்போது..? தேதியை அறிவித்தார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்..!
நாட்டின் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல், ஜுலை 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜுலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதாகவும், புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25ஆம் தேதியன்று பதவியேற்பார் என்றும் தெரிவித்தார்.
தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 15ஆம் தேதி தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற இரு அவைகளிலும், அனைத்து சட்டமன்றங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
Comments