தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2476
தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், வரும் 13ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில இடங்களில் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 13ஆம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments