ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்பு

0 3386
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை பத்திரமாக மீட்பு

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தையை ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் பத்திரமாக மீட்டனர்.

துடாபூர் கிராமத்தில் உள்ள பண்ணையில் குழந்தையின் பெற்றோர் பணியாற்றி வருகின்றனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிவம் நேற்றிரவு 8 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில், சுமார் 25 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ராணுவ வீரர்களும், போலீசாரும் நிகழ்விடத்திற்கு வந்த 40 நிமிடங்களில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments