105 மணி நேரத்தில் 75 கி.மீ. நீளத்திற்கு சாலை அமைத்து கின்னஸ் சாதனை : தேசத்திற்கு பெருமை அளிக்கும் தருணம் - மத்திய அமைச்சர் பெருமிதம்

0 2567

காராஷ்டிராவில் 105 மணி நேரத்தில் 75 கிலோ மீட்டர் நீளத்திற்கு கான்கிரிட் சாலை அமைக்கப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது தேசத்திற்கு பெருமை அளிக்கும் தருணம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அமராவதி - அலோகா இடையிலான 53வது தேசிய நெடுஞ்சாலையில் ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி 7 ஆம் தேதிக்குள் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 800 ஊழியர்களும், தனியார் நிறுவனத்தை சேர்ந்த 720 பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதாக கட்காரி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments