செல்போன் கூட கூடாது... விக்கி - நயன்தாரா திருமணம்.! விருந்தினர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா?

0 4766
செல்போன் கூட கூடாது.. விக்கி - நயன்தாரா திருமணம்.! விருந்தினர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளா?

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு நாளை திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருமணத்தில் பங்கேற்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது..

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இருவரும் ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ள நிலையில் நாளை விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது.

ஏற்கனவே திருப்பதியில் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியான நிலையில் 150 பேர் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி மறுத்தது. இதனால் திருமணத்தை மகாபலிபுரத்தில் நடத்த விக்கி நயன் ஜோடி முடிவு செய்தது.

தங்களின் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், விஜய், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உட்பட 200 பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் திருமணத்தை ஒளிப்பதிவு செய்யும் உரிமையை ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனால் திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி திருமணத்திற்கு வருபவர்கள் அரங்கத்திற்குள் போட்டோ எடுக்கக்கூடாது. அரங்கத்திற்குள் செல்போனை கொண்ட வரக்கூடாது என கூறியுள்ளனர்.

திருமணத்தை நேரலை செய்யும் உரிமையை பெற்றுள்ளதால், எந்த ஒரு புகைப்படமோ அல்லது வீடியோ காட்சிகளோ வெளியே கசிந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாம் நெட்டிஃபிளிக்ஸ் நிறுவனம். அதன் காரணமாகவே திருமணத்திற்கு வருபவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாம்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments