நெல் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 100 ரூபாய் உயர்வு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைக் குவிண்டாலுக்கு நூறு ரூபாய் உயர்த்தி 2060 ரூபாயாக நிர்ணயித்ததற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார். அப்போது உற்பத்திச் செலவைவிட ஒன்றரை மடங்கு இருக்கும் வகையில் 14 வகை விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
2022 - 2023 காரிப் பருவத்தில் முதல்தர நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைக் குவிண்டாலுக்கு 1960 ரூபாயில் இருந்து 2060 ரூபாயாகவும், சாதாரண வகை நெல்லுக்கு 1940 ரூபாயில் இருந்து 2040 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
Comments