தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணம் ?

0 2803

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் திருமணம் முடித்து இடைநின்ற 511 மாணவிகளை கண்டறிந்து பள்ளிக்கல்வித்துறை  மீண்டும் பள்ளியில் சேர்த்துள்ளது.

பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவ மாணவிகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதையொட்டி நடத்தப்பட்ட ஆய்வில், 8 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வந்த 511 மாணவிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

குழந்தை திருமணம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், வறுமை காரணமாக இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments