பற்றி எரிந்த விக்ரம் திரை.. பதறி ஓடிய ரசிகர்கள்..! திரை தீப்பிடித்த தருணம்

0 4520

புதுச்சேரியில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் திரையிடப்பட்டிருந்த தியேட்டரின் திரையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு தியேட்டரைவிட்டு வெளியேறினர்.

புதுச்சேரி அருகே காலாப்பட்டு பகுதியில் உள்ள ஜெயா திரையரங்கில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போது, திரையின் ஒரு பக்கத்தில் திடீரெனத் தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதனால் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலயறியடித்து கொண்டு தியேட்டரைவிட்டு வேகமாக வெளியேறினர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு, திரை முற்றிலும் எரிந்து சாம்பலானது.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காலாப்பட்டு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments