தவறான திசையில் செல்லும் தாலிபான் அரசு.. சர்வதேச சமூகம் உணர்த்த வேண்டும்.. ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு.!

0 2164

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு தவறான திசையில் செல்வதாகவும் இதனை சர்வதேச சமூகம் சொல்ல வேண்டும் என்றும் ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சென்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாலிபான்களால் தங்கள் அரசாங்கம் தூக்கி எறியப்பட்டது ஆப்கானிஸ்தான் மக்களின் தவறு அல்ல என்றும், ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான பேரழிவு உருவாகி இருப்பதாகவும் எச்சரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments