திபெத்தில் தொடர்ந்து உருகி வரும் பனிப்பாறைகள்.. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என எச்சரிக்கை..!
திபெத்தில் உள்ள பனிமலைகள் தொடர்ந்து உருகி வருவதால் அதனை சுற்றியுள்ள பிராந்தியங்கள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
திபெத்திலிருந்து உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா, கங்கை உள்ளிட்ட நதிகளை நம்பி ஆசிய கண்டத்தில் சுமார் ஒன்றரை பில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பருவ நிலை மாற்றம், காடுகளை அழித்தல், கனிம வளங்களை அதிக அளவில் வெட்டி எடுத்தல் போன்ற பிரச்சினைகளால் பனிப்பாறைகள் தொடர்ந்து உருகி வருவதாக திபெத் மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
Comments